பழைய பொருட்களை தீயிலிட்டு போகி பண்டிகை கொண்டாட்டம்!
பழைய பொருட்களை தீயிலிட்டு ஆட்டம், பாட்டத்துடன் போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டி மகிழ்ந்தனர்.
தை முதல் நாளில், தமிழர்களின் முக்கியப் பண்டிகையான பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் மார்கழியின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதேபோல், திருவொற்றியூரில் மக்கள் பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தி உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து சிறுவர்கள் மேளம் கொட்டி, ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காஞ்சிபுரத்தில் மழையையும் பொருட்படுத்தாமல், நனைந்தபடியே மக்கள் பழைய பொருட்களை தீயிலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல் புதுச்சேரியில் போகி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அப்போது பழைய பொருட்களை கொளுத்தியும், மேளம் அடித்தும் போகி பண்டிகையை கொண்டாடினர்.