பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய இந்தியா மறுப்பு!
சாம்பியன்ஸ் டிராபி போட்டியைத் தொகுத்து வழங்கும் பாகிஸ்தானின் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
15 போட்டிகள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. வழக்கமாக போட்டியைத் தொகுத்து வழங்கும் நாட்டின் பெயர் பொறித்த ஜெர்சியை அனைத்து நாட்டு வீரர்களும் அணியும் நிலையில், பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை அணிய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல போட்டித் தொடங்குவதற்கு முன்பாக நடைபெறும் கேப்டன்களுக்கான பேட்டி மற்றும் குழு புகைப்பட நிகழ்வில், ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவாக தெரிவித்துவிட்டது.
இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்டுள்ளது.