பாஜகவுக்கு வாக்களித்த மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் வாக்காளர்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் பாஜக என்றுமே முன்னணியில் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றிக்கு பணியாற்றிய என்டிஏ கூட்டணி கட்சியினருக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மகாயுதி கூட்டணிக்கு மீண்டும் வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் மீண்டும் நல்லாட்சி அமைய மக்கள் வாய்ப்பளித்துள்ளனர் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
பல்வேறு இடைத்தேர்தல்களில் NDA வேட்பாளர்களை ஆசிர்வதித்த பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு நன்றி. அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.