பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!
03:37 PM Dec 19, 2024 IST | Murugesan M
பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவை கூடுவதற்கு முன்பாக இண்டி கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் பிரச்னையை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்துக்குள் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சென்றபோது சக எம்.பி. ஒருவரை ராகுல் காந்தி தள்ளிவிட்டதில், பாஜகவை சேர்ந்த பிரதாப் சந்திர சாரங்கி மீது அவர் விழுந்ததாக கூறப்படுகிறது.
Advertisement
இதில் பிரதாப்பின் தலையில் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இநிலையில் பாஜக எம்பி தாக்கப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement