பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் மணி விழா - அண்ணாமைலை பங்கேற்பு!
பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் மணி விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை பங்கேற்றார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :
"இன்றைய தினம், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் வேத சுப்ரமணியம்
அவர்களின் 60 ஆம் ஆண்டு மணி விழாவில், தேசிய செயற்குழு உறுப்பினர் அன்பு அண்ணன் ஹெச்.ராஜாவுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பொது வாழ்க்கையில், மக்கள் பணியின் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வேத சுப்ரமணியம் , இறைவன் அருளால், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மேலும் பலபல ஆண்டுகள் தனது சமூகப் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன்" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார். மேலும், தொண்டர் ஒருவர் தாமரை மாலை அணிவிக்க முயன்றார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு மாலை மட்டும் இருந்ததை அறிந்த அண்ணாமலை, அந்த மாலையை அருகில் இருந்த எச்.ராஜாவுக்கு அணிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், அந்த தொண்டரிடம் இருந்து பூங்கொத்து மட்டும் வாங்கிக்கொண்டார். அண்ணாமலையின் இந்த செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.