பாஜக நீதி கேட்பு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் - அண்ணாமலை திட்டவட்டம்!
பாஜக நீதி கேட்பு பேரணி இன்று திட்டமிட்டப்படி மதுரையில் தொடங்கும் என கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் ஏன் செய்தியாளர்களை சந்திக்க மறுக்கிறார் என கேள்வி எ’ழுப்பினார்.
வைகோவின் கண்முன்னால் 2026ல் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். வைகோ மீது மரியாதை உள்ளதாகவும், அவர் திமுகவை எதிர்த்து வெளியே வந்ததாகவும், திமுகவை வைகோ போல் யாரும் திட்டியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை வழங்க வேண்டும் வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதாகவும், இதனை யார் கண்காணிப்பது யார் என்றும் இது குறித்து முதல்வருக்கு தெரியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
குழந்தைகள் , பெண்களுக்கும் எதிராக குற்றங்களை பதிவு செய்யாமல் அரசு செயல்படுவதாகவும் அவர் கூறினார்.