பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பிறந்த நாள் - பிரதமர் மோடி, எல்.முருகன் வாழ்த்து!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், நமது தேசத்திற்கு அத்வானி ஜி செய்த சிறந்த சேவைக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதிகளில், ஒருவர். அவர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்துள்ளார். அவரின் அறிவுத்திறன் உள்ளிட்ட பன்முகத்தன்மைக்காக எப்போதும் மதிக்கப்படுகிறார்
அவரின் வழிகாட்டுதலைப் பெற்றதில் நான் அதிர்ஷ்டசாலி. அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எல்.கே. அத்வானி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அவருக்கு இந்த ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னாவை பெற்று தந்துள்ளது. அவர் ஆரோக்கியம், மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.