செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் வேண்டும் : விஜய் சேதுபதி

03:12 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை தமுக்கம் மைதானத்தில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருப்பதாகவும், அதை தமிழ் மொழியிலும் கொண்டு வந்தால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் என தெரிவித்தார்.

Advertisement

மேலும், வரி செலுத்துபவர்களுக்கு வரிச்சலுகை போன்ற ஒருசில நண்மைகள் இருந்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement
Tags :
cinema newsMAINPAN card application website should also be in Tamil: Vijay Sethupathiவிஜய் சேதுபதி
Advertisement