'பான் 2.0' திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டிஜிட்டல் அமைப்புகளுக்கான பொது அடையாளமாக பான் எண்ணை பயன்படுத்த வழிவகை செய்யும் வருமான வரித்துறையின் 'பான் 2.O' திட்டத்துக்கு ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது பேசிய அவர்,
வருமான வரித்துறையின் 'பான் 2.0' திட்டத்துக்கு ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த திட்டம் வரி செலுத்துவோரின் பதிவு மற்றும் சேவைகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தை செயல்படுத்தவும், மேம்பட்ட தரத்துடன் விரைவான சேவையை வழங்குவதற்கும் பயன்படும் என அஷ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும் பொதுவான அடையாளமாக பான் எண்ணை பயன்படுத்தவும் இந்த திட்டம் வகை செய்யும் என்றும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.