பாலக்காடு தொகுதி இடைத்தேர்தல் - பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை!
கேரள மாநிலம், பாலக்காடு சட்டப்பேரவை தொகுதியில், பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் முன்னிலையில் உள்ளார்.
பாலக்காடு எம்எல்ஏவாக இருந்த ஷாபி பரம்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வடகரா தொகுதியில் வெற்றி பெற்று எம்பியானார். இதனால், பாலக்காடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் கிருஷ்ணகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் மம்கூ களம் இறங்கப்பட்டார்.
இந்நிலையில், காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
இந்நிலையில், அவர் 464 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 6 -வது சுற்று நிலவரப்படி பாஜக வேட்பாளர் 24 ஆயிரத்து 332 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மம்கூ 23,868 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில், கடந்த 2016 மற்றும் 2021 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக 2-ம் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.