பாலியல் தொல்லை அளித்தவரை அடித்து துவைத்த பெண்!
10:52 AM Jan 06, 2025 IST
|
Murugesan M
தெலங்கானாவில் பாலியல் தொல்லை அளித்த நபரை பிடித்து இளம்பெண் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
Advertisement
தெலங்கானாவின் கரீம் நகரில் இளம்பெண் ஒருவர் சாலையோர இட்லி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு வந்த நபர் ஒருவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனையடுத்து இளம்பெண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
Advertisement
பலரும் இளம்பெண்ணின் துணிச்சலை வெகுவாக பாராட்டினர். இதனிடையே சம்பந்தப்பட்ட இளம்பெண்ணிடம் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், பாலியல் தொல்லை கொடுத்த நபரை தேடி வருகின்றனர்.
Advertisement
Next Article