பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் சேதம்! : அழுகும் சடலங்கள்
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கயிறு போட்டு கட்டி உள்ளதால், அனைத்து சடலங்களும் அழுகி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் வசித்து வந்த சிவலிங்கத்திற்கு, கடந்த 4ஆம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். சிவலிங்கத்தின் 3 மகன்களும் லண்டனில் வசிப்பதால் அவரது உடல் பிணவறையில் உள்ள குளிரூட்டும் பெட்டியில் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தந்தையின் உடலை பெறுவதற்காக, 3 மகன்களும் வெளிநாட்டில் இருந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிணவறையில் வைக்கப்பட்டுள்ள தந்தையின் அழுகிய சடலத்தை பார்த்த மூன்று மகன்களும் அதிர்ச்சியடைந்தனர். பிணவறையில் உள்ள குளிரூட்டும் அறைகளின் கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கயிறு போட்டு கட்டி உள்ளதால் தந்தையின் உடல் அழுகி துர்நாற்றத்துடன் காணப்பட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.