For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரதமர் மோடி நாளை ராஜஸ்தான் பயணம்! - ரூ.46,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

06:35 PM Dec 16, 2024 IST | Murugesan M
பிரதமர் மோடி  நாளை ராஜஸ்தான் பயணம்    ரூ 46 300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

நாளை ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

நாளை ராஜஸ்தான் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார்.

Advertisement

7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, 9 மத்திய அரசு திட்டங்கள் மற்றும் 6 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ.35,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.

நவ்நேரா தடுப்பணை, நவீன மின்சார பரிமாற்ற கட்டமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை அமைப்பு திட்டங்கள், பில்டி – சம்தாரி – லூனி – ஜோத்பூர் – மெர்தா சாலை – தேகானா – ரத்தன்கர் ரயில் வழித்தட பிரிவில் மின்மயமாக்கல் மற்றும் தில்லி – வதோதரா பசுமை தள சீரமைப்பின் 12-ம் தொகுப்பு (தேசிய நெடுஞ்சாலை – 148 என்) தொகுப்பு 12 (மாநில நெடுஞ்சாலை – 37ஏ சந்திப்பு வரை மெஜ் ஆற்றின் மீது கட்டப்படும் மேம்பாலம்) ஆகிய திட்டங்கள் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்படும்.

Advertisement

இந்தத் திட்டங்கள் மக்களுக்கு எளிதான பயணத்திற்கு வழிவகுக்கவும், பிரதமரின் பசுமை எரிசக்தி தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மாநிலத்தின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவும்.

ரூபாய் 9 ஆயிரத்து 400 கோடி செலவில், ராம்கர், மஹல்பூர் தடுப்பணை கட்டும் பணிக்கும், சம்பல் ஆற்றின் மூலம் நவ்நேரா தடுப்பணையிலிருந்து பிசல்பூர் மற்றும் இசர்தா அணைக்கு நீர் விநியோக அமைப்புக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

அரசு அலுவலகக் கட்டிடங்களில் மேற்கூரை சூரிய மின்சக்தி ஆலைகளை நிறுவுதல், பூகலில் (பிகானேர்) 2000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி பூங்கா மற்றும் 1000 மெகாவாட் சூரிய பூங்காக்களின் இரண்டு கட்டங்கள் மற்றும் சாய்பாவில் இருந்து (தோல்பூர்) பரத்பூர்-தீக்-கும்ஹர்-நகர்-கமான் & பஹாரி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் சம்பல்-தோல்பூர்-பரத்பூர் மறுசீரமைப்பு பணிகள் ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். லூனி – சம்தாரி – பில்டி இரட்டை ரயில் பாதை, அஜ்மீர் – சந்தேரியா இரட்டை ரயில் பாதை, ஜெய்ப்பூர் – சவாய் மாதோபூர் இரட்டை ரயில் பாதை திட்டம் மற்றும் இதர எரிசக்தி பரிமாற்றம் தொடர்பான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Advertisement
Tags :
Advertisement