பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!
பிரதமர் மோடிக்கு கயானா, டொமினிகா நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டதையடுத்து அவர் பெற்ற பிற நாட்டு விருதுகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.
பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். நைஜீரியாவுக்கு சென்ற பிறகு அவர் பிரேசிலில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் மாநாட்டை முடித்துவிட்டு கயானாவுக்கு சென்றார்.
அங்கு கரீபியன் பகுதியில் நடைபெற்ற 2-வது இந்தியா- கேரிகோம் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அவருக்கு கயானா நாட்டின் உயரிய தேசிய விருதான "தி ஆர்டர் ஆப் எக்சலன்ஸ்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனை கயானா அதிபர் முகமது இர்பான் அலி அவருக்கு வழங்கி சிறப்பித்தார். அதனைத்தொடர்ந்து மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் மிக உயரிய தேசிய விருதும் வழங்கப்பட்டன. "டொமினிகா அவார்டு ஆப் ஆனர்" என்ற அந்த விருதை அதிபர் சில்வனி புர்டான் வழங்கினார். இதன்மூலம் பிரதமர் மோடி பெற்றுள்ள பிற நாட்டு உயரிய விருதுகளின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது.