For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு - மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

12:02 PM Dec 24, 2024 IST | Murugesan M
பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு   மத்திய அமைச்சர் எல் முருகன் இரங்கல்

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல், மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துளளார்.

திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் ஷ்யாம் பெனகல். வங்கதேசத்தின் முதல் அதிபரான முஜிபுர் ரஹ்மான் வாழ்க்கை வரலாற்றை, 'முஜிப்: த மேக்கிங் ஆஃப் எ நேஷன்' என்ற பெயரில் இவர் இயக்கிய திரைப்படம் கவனத்தை ஈர்த்தது.

Advertisement

இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இவர் இயக்கிய 'அங்கூர்' திரைப்படம் அமைந்தது. பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர், 900-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களையும், ஏராளமான ஆவணப் படங்களையும் தயாரித்துள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள இவர் கடந்த 14ஆம் தேதி தனது 90ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதில், முக்கிய சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். இந்நிலையில், வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு ஆகிய பிரச்னைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஷ்யாம் பெனகல் நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90.

Advertisement

ஷ்யாம் பெனகல், மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துளளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் #ஷ்யாம் பெனகல் ஜியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தனது அபார திறமையால் இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தினார். கலை மற்றும் கலாச்சார உலகில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Advertisement
Tags :
Advertisement