செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பிரயாக்ராஜில் காலை 10 மணி வரை நீராடிய 3.61 கோடி பக்தர்கள் - ஜனவரி 28 ஆம் தேதி வரை 19.94 கோடி பேர் நீராடியதாக அறிவிப்பு!

11:14 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் சுமார் 10 கோடி பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில், மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட, பல்வேறு மாநிலங்களில் இருந்து கேடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அதிகாலையில் உடைந்ததால், கூட்டநெரிசல் ஏற்பட்டது.  காயமடைந்த 50- க்கும் மேற்பட்டோருக்கு ஷேத்ராவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலைமையைக் கேட்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார். இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்தார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரயாக்ராஜில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார். கும்பமேளாவில் பங்கேற்க சுமார் 8 முதல் 10 கோடி வரையிலான பக்தர்கள் திரண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்று  3.61 கோடிக்கும் அதிகமானோர் திரிவேணி நீரில் புனித நீராடியுள்ளதாகவும், ஜனவரி 28 ஆம் தேதி வரை மொத்தம் 19.94 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் நீராடியுள்ளதாகவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

பக்தர்கள் திரிவேணி சங்கமத்தை நோக்கி வராமல், அருகிலுள்ள நீர்நிலைகளிலேயே புனித நீராடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்து வருவதாகக் கூறிய யோகி ஆதித்யநாத், பக்தர்களை அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement
Tags :
10 crore devoteesamth shahFEATUREDKumbh Mela stampedeMAINModiprayagraj kumbh melauttar pradeshyogi
Advertisement