பிளஸ் 2 தேர்வு முடிவு: 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம்!
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 97 புள்ளி நான்கு ஐந்து தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 849 மாணவ மாணவிகளில், 23 ஆயிரத்து 242 மாணவ மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம், 97 புள்ளி நான்கு ஐந்து தேர்ச்சி சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதேபோல், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்திலும் 95 புள்ளி ஏழு ஐந்து சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
97 புள்ளி நான்கு இரண்டு சதவீதம் தேர்ச்சியுடன், சிவகங்கை, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் இரண்டாமிடம் பிடித்துள்ளன.
90 புள்ளி நான்கு ஏழு சதவீதம் தேர்ச்சியுடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.