புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கில் புதிய சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தம் மூலமாக, பரிந்துரை குழுவில் இருந்து தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கேபினட் அந்தஸ்திலான அமைச்சர் குழுவில் சேர்க்கப்பட்டார்.
இதனை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயா தாக்கூர், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உட்பட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும், வேறு அமர்வுக்கு மாற்றும்படியும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கில் சஞ்சீவ் கன்னா ஏற்கனவே உத்தரவுகளை பிறப்பித்து இருப்பதால், அவர் விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை என, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுவை ஜனவரி 6-ம் தேதிக்கு பின், வேறு அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டார். அதேநேரம், புதிய சட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.