புதுக்கடை அருகே கோயில்களில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு!
12:50 PM Nov 23, 2024 IST | Murugesan M
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கோயில்களில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்கப்பட்டன.
பார்த்திவபுரம் பகுதியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ஒரு ஐம்பொன் சிலையும், அதேபோன்று மாங்காடு அருகேயுள்ள பால தண்டாயுதபாணி முருகன் கோயிலிலும் இருந்த மற்றொரு ஐம்பொன் சிலையும் காணாமல் போனது.
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து சிலைகளை மீட்டனர். மேலும், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement