செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்க போட்டி போடும் வீரர்கள்!

02:30 PM Jan 19, 2025 IST | Sivasubramanian P

புதுக்கோட்டை மாவட்டம் முக்காணிப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். .

Advertisement

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி நடைபெறுவது வழக்கம் அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது

இதில் திருச்சி புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் பங்கேற்பதற்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல்  300 மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, புதுக்கோட்டை எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் கொடியாசித்து தொடங்கி வைத்தனர் முன்னதாக காளையர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக களம் இறக்கப்பட்டன இதனை தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக டோக்கன் வரிசைப்படி வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளைப் பிடித்த காளையர்களுக்கும் காளையர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளையின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குக்கர், டைனிங் டேபிள், கட்டில் பரிசுகளாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சிறந்த காளை,  சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு இரண்டு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 750 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
Tags :
2025 jalllikattuFEATUREDjallikattujallikattu 2025 newsJallikattu 2025.jallikattu highlightsjallikattu livejallikattu live 2025jallikattu live 2025 todayjallikattu videosMAINMukkaanipatti jallikattupudukottai jallikattu
Advertisement
Next Article