புதுச்சேரியில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்ட மீனவர்!
புதுச்சேரியில் கனவா மீன்களை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் உள்ள மீனவ கிராமங்களில் ஹூக்கான் என்ற அக்டி கணவாய் முறையை பயன்படுத்தி மீனவர்கள் கனவா மீன்களை பிடித்து வரும் நிலையில், இந்த முறைக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது.
இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரிய காலப்பட்டு பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்பவர் நிவாரணம் வழங்க வலியுறுத்திஅதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, முகேஷை போலீசார் கைது செய்தபோது குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.