For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

புதுச்சேரியில் 6 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு!

03:50 PM Dec 04, 2024 IST | Murugesan M
புதுச்சேரியில் 6 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு

மழை வெள்ள பாதிப்பில் இருந்து புதுச்சேரி மீண்டுவரும் நிலையில் 6 நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி கடும் வெள்ள பாதிப்பை சந்தித்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

Advertisement

இதனால் பள்ளிகளுக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக மழை இல்லாதபோதும் வெள்ளம் வடியாததால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பள்ளிகளை தவிர்த்து பிற பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement