புதுச்சேரி சித்தி விநாயகர் கோயில் தங்கத்தேர் செய்யும் பணி - துணைநிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி சித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர் செய்யும் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்து செட்டி பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரத்ததால் செய்யப்பட்ட தேர் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு தங்கத்தேர் செய்ய வேண்டும் என்று ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 12.5 அடி உயரமும் 8 அடி நீளமும் 6 அடி அகலத்திலும், சுமார் 4 கிலோ 800 கிராம் தங்கமும் 30 கிலோ காப்பர் என ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் செய்யபட உள்ளது.
இந்த நிலையில் தங்க தேர் செய்யும் பணிக்கான துவக்க விழா கோயிலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் கலந்துகொண்டார். ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த துணைநிலை ஆளுநருக்கு ஆலயத்தின் நிர்வாகத்தின் சார்பில் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தங்கத்தேர் செய்வதற்காக ஆலயத்தின் நிர்வாகத்திற்கு காசோலையை வழங்கிய துணை நிலை ஆளுநர், உளியால் மரத்தை செதுக்கி தங்கத்தேர் செய்யும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகிகள் பலர் கலநது கொண்டனர்.