புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்ற ராகுல் காந்தி! : பாஜக விமர்சனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்த சுவடு மறைவதற்குள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வயோதிகம் சார்ந்த உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வேளையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, புத்தாண்டு கொண்டாட வியட்நாம் சென்றது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, மன்மோகன் சிங் மறைவால் ஒட்டுமொத்த தேசமே துக்கத்தில் ஆழ்ந்த நிலையில், ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் புத்தாண்டு கொண்டாட வியட்நாம் பயணித்திருக்கிறார் என எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
பாஜகவின் விமர்சனத்துக்குப் பதிலளித்த விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி வியட்நாம் பயணிப்பது, பாஜகவுக்கு எந்த விதத்தில் கவலையளிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.