செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி

04:34 PM Jan 16, 2025 IST | Murugesan M

கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின்  திட்டங்கள் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் ஒன்பதாண்டு நிறைவையொட்டி பிரதமர்  நரேந்திர மோடி இன்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளில், மாற்றத்துக்கான இந்த சிறந்த திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில்,

Advertisement

"புதுமை, தொழில்முனைவு, வளர்ச்சி ஆகியவற்றை சிறப்பாக மறுவரையறை செய்த ஒரு மைல்கல் முயற்சியான ஸ்டார்ட் அப்  இந்தியா இயக்கத்தின் ஒன்பதாண்டு நிறைவை (#9YearsOfStartupIndia) இன்று நாம் கொண்டாடுகிறோம்.

இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சக்திவாய்ந்த வழியாக இது உருவெடுத்துள்ள நிலையில், இந்தத் திட்டம் எனக்கு  மிகவும் பிடித்த முக்கியமான திட்டமாகும். கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்த சிறந்த திட்டம் எண்ணற்ற இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அவர்களின் புதுமையான யோசனைகளை வெற்றிகரமான புத்தொழில்களாக மாற்றியுள்ளது.

அரசைப் பொறுத்தவரை, புத்தொழில் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையம் எடுத்துள்ளது. நமது கொள்கைகள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல், வளங்களை அதிக அளவில் அணுகுதல், ஒவ்வொரு கட்டத்திலும் தொழில் துறையினருக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன.

நமது இளைஞர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு முடிவெடுப்பவர்களாக  மாறுவதற்காக, புதிய கண்டுபிடிப்புகளையும் அதற்கான தொழில் பாதுகாப்பு மையங்களையும் நாங்கள் தீவிரமாக ஊக்குவித்து வருகிறோம். புத்தொழில் நிறுவனத்தினருடன் நான் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து உரையாடி வருகிறேன்.

ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கத்தின் இந்த வெற்றியானது இன்றைய இந்தியா ஆற்றல்மிக்க, நம்பிக்கை மிகுந்த, எதிர்காலத்திற்கு தயாராக உள்ள இந்தியா என்பதை பிரதிபலிக்கிறது.

இந்த பயணத்தை நாம் மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு கனவையும் மேம்படுத்தும் வகையில் தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிக்கும் ஒரு தொழில்முனைவோர் சூழல் அமைப்பை தொடர்ந்து வளர்த்தேடுப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறோம்.

புத்தொழில் உலகில் உள்ள ஒவ்வொரு இளைஞரையும் நான் பாராட்டுகிறேன். மேலும் அதிகமான இளைஞர்கள் இதில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள் என்பது என் நம்பிக்கை!"  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
9YearsOfStartupIndiaFEATUREDMAINPM ModiStartupIndia
Advertisement
Next Article