புறக்கணிக்கப்படுவது தேர்தல் அல்ல, திமுகதான்! : தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சரும், ஆளுநரும் கருத்து வேற்றுமையை மறந்து தோழமையுடன் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Advertisement
தமிழகம் முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொண்டர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார். அப்போது, அங்கு இருந்த பாஜக தொண்டர்கள், பொங்கலோ பொங்கல், தாமரை பொங்கல், தமிழர் பொங்கல் என முழக்கங்களை எழுப்பி மகிழ்ந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகை ஏமாற்றத்துடன் தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். ஆளுநர், முதலமைச்சரின் கருத்து வேற்றுமைகள் மக்களுக்கு பயன் தராது என தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன், இருவரும் தோழமையுடன் பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.