பூந்தமல்லி சிறையில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் - துணை ஜெயிலர் உள்ளிட்ட 5 பேர் சஸ்பெண்ட்!
08:35 PM Dec 12, 2024 IST | Murugesan M
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லி சிறையில் கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், துணை ஜெயிலர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பூந்தமல்லி கிளை சிறையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
இந்நிலையில், கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் சிறை வார்டன் திடீர் சோதனை மேற்கொண்டதில், 5 செல்போன், கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement