For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

பெண்களை மதிக்காத தலிபானுக்கு சர்வதேச அங்கீகாரம்? - சிறப்பு கட்டுரை!

08:00 AM Oct 29, 2024 IST | Murugesan M
பெண்களை மதிக்காத தலிபானுக்கு சர்வதேச அங்கீகாரம்    சிறப்பு கட்டுரை

அமெரிக்க ஆதரவு அரசிடமிருந்து ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கு, உலக நாடுகள் முன்வந்துள்ளன. உலகமே தலிபான்களை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கும் நிலையிலும், ஆப்கானிஸ்தானில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களைத் தலிபான்கள் நிறுத்த மறுக்கின்றனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தனர். ஆனால் எந்த நாடும், தாலிபானை ஆப்கானிஸ்தானின் சட்டபூர்வமான அரசாக , அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

Advertisement

கடந்த ஜூலை மாத இறுதியில், கத்தார் தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தான் தொடர்பாக ஐநா தலைமையில் மூன்றாவது மாநாடு நடைபெற்றது. தலிபான்கள் ஆட்சியில், ஆப்கானிஸ்தான் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை பங்கேற்ற இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 25 நாடுகள் கலந்து கொண்டன.

Advertisement

ஐநா சபை தலைமையிலான இந்த கூட்டத்தில், பெண்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தற்குப் பின்பே தலிபான் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் ஐநா தலைமையில் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும். தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கும் நோக்கத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்று கூட்டத்துக்குப் பின்னர் ஐ.நா தெளிவுபடுத்தியிருந்தது.

தலிபான் ஆட்சியில், கடந்த 3 ஆண்டுகளாக, இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் பெயரால் கடுமையான கட்டுப்பாடுகள் மக்கள் மீது திணிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, உலகின் மிகக் கடுமையான உரிமை நெருக்கடியை பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உருவாக்கியுள்ளனர்.

பெண்களின் கல்வி, ஊதியம் பெறும் வேலை, பேச்சு சுதந்திரம் மற்றும் நடமாடும் சுதந்திரம் மற்றும் அரசியல் பங்கேற்பு என தனிவாழ்விலும், பொது வாழ்விலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளைத் திட்டமிட்டு தலிபான்கள் மீறுகின்றனர். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறியீட்டில் தலிபான் ஆட்சியில் உள்ள ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த தலிபான்,பெண்கள் தொடர்ந்து வேலை செய்யலாம் மற்றும் பள்ளிக்குச் செல்லலாம் என்று கூறியது. ஆனாலும், ஷரியத் சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்தது.

பெண்களுக்கு உணவு, வேலை சுதந்திரம் என உரிமைகளுக்காக, தலிபானின் புதிய அடிப்படை வாத இஸ்லாமிய சட்டத்தை எதிர்த்து தெருவில் இறங்கி போராடிய ஆப்கான் பெண்கள் கைது செய்யபப்பட்டனர். தலிபான் சிறைகளில் சித்திரவதைக்கு ஆளாக்க பட்டனர்.

தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, இனி, தலிபன்களுக்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க மாட்டோம் என்று உறுதியளித்து, ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டனர். பெண்கள் உரிமைக்காக போராடியவர்களின் ஆண் உறவினர்களும்,பெண்களை இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

பொதுப் பூங்காக்களில் நடப்பது, உடல் பயற்சி கூடங்களுக்கு செல்வது, அழகு நிலையங்களுக்குப் போவது, குட்டை பாவாடை, டீ சர்ட் போன்ற ஆடைகளை அணிவது, இசை கேட்பது, வீட்டுக்குள்ளும்,வெளியேயும் பேசுவது,பாடுவது ஆகிய அனைத்தும் தண்டனைக்கு உரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. இப்போது, தாலிபன்கள் சில புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில் தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் தோன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண் ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தித் தொகுப்பாளர்கள் கூட தலையை மறைத்துக் கொள்ளும் ஆடையை அணிந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெண்கள் தங்கள் தலையை மறைத்துக் கொள்ள என்ன மாதிரியான உடையை அணிய வேண்டும் என்கிற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மற்றும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட பெண்கள் மீது கசையடி மற்றும் கல்லெறிதல் ஆகிய தண்டனைகளை மீண்டும் அறிமுகப்படுத்தி உள்ளனர் தலிபான்கள்.

இந்நிலையில், சர்வதேச அங்கீகாரம் தேடி தலிபான்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஏற்கெனவே தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபான்களை கஜகஸ்தான் நீக்கியது. இதனை தொடர்ந்து, ரஷ்யாவும் தலிபான் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க உள்ளது.

இந்நிலையில், நார்வேக்கான ஆப்கானிஸ்தானின் தூதராக இருந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சுக்ரியா பராக்சாய், ஆப்கானிஸ்தானின் தலிபான்களால் ஒன்றரை கோடி பெண்களும் சிறுமிகளும் கடுமையாக பாதிக்கப் பட்டதாக, தெரிவித்துள்ளார். இந்நிலையிலும், சர்வ தேச நாடுகள் தலிபான் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கட்டுப்பாடுகள் இருக்கும் வரை அங்கீகாரம் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று ஐநா சபை தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement
Tags :
Advertisement