பெண்கள் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் தயார் - உமா ரதி ராஜன் உறுதி!
01:25 PM Jan 02, 2025 IST | Murugesan M
பெண்களின் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் தயார் என பாஜக மகளிர் அணியின் மாநிலத் தலைவர் உமா ரதி ராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக தெரிவித்தார்.
Advertisement
போராட களத்திற்கு வந்தால் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்தால், குரல்வளையை நெறிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
"பெண்கள் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் பாஜக மகளிர் அணியினர் தயார் என்றும், மதுரையில் இருந்து சென்னை வரை பேரணியாக வந்து கோரிக்கை மனுவை ஆளுநரிடம் தர உள்ளதாகவும் அவர் கூறினார். நீண்ட கால குற்றவாளியை சுதந்திரமாக நடமாடவிட்டது எப்படி என்றும் உமா ரதி ராஜன் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement