பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு - ஓய்வு பெற்ற ஐஜி முருகனுக்கு பிடிவாரண்ட்!
02:15 PM Nov 23, 2024 IST | Murugesan M
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுப்பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் அதிரடிப்படையில் பணிபுரிந்த ஐஜி முருகன், சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில், 2018 ம் ஆண்டில் இணை இயக்குனராக பணிபுரிந்த போது, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
Advertisement
இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, ஓய்வு பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதனைதொடர்ந்து வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement