பேருந்து வசதி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள்!
11:03 AM Jan 12, 2025 IST | Murugesan M
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பெங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடை மற்றும் பொருட்களை வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்ப முயன்றனர்.
Advertisement
ஆனால், ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து செய்யார், காவனூர், வந்தவாசி மற்றும் கலவை ஆகிய கிராமப் பகுதிகளுக்கு செல்ல, இரவு நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement