பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளர் கைது!
சேலத்தில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்த பெண்ணை ஆசைக்கு இணங்க கோரிய பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள வீரக்கல் புதூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி நபர் மரணமடைந்த நிலையில், அவரது 25 வயதுடைய மகள் வாரிசு வேலை கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இளம்பெண் அளித்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஆட்சியர் பிருந்தா தேவி பரிந்துரைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவவக கண்காணிப்பாளர் தேவராஜன், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தனது ஆசைக்கு இறங்கினால் மட்டுமே வாரிசு வேலை கொடுக்க இயலும் என இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பெண் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜனை கைது செய்தனர். இதனிடையே, தேவராஜனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.