பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில் - முன்பதிவு தொடங்கியவுடன் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!
09:54 AM Jan 05, 2025 IST | Murugesan M
பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.
சென்னையில் வசித்து வரும் வெளியூரைச் சேர்ந்த மக்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதற்காக, சென்னையில் இருந்து ரயில்கள் மற்றும் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
Advertisement
அந்த வகையில், சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரத்திற்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒருசில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
Advertisement
Advertisement