செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பொங்கல் சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்!

09:27 AM Jan 04, 2025 IST | Murugesan M

பொங்கல்  சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது

Advertisement

அதன்படி, தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் வரும் 13 -ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் கன்னியாகுமரி சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில், கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி 14 -ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் சென்றடைகிறது.

Advertisement

சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில், வரும் 12 மற்றும் 19ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நாகர்கோவில் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் ஜனவரி 13 மற்றும் 20 ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் வரும் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திருநெல்வேலி சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் வரும் ஜனவரி 12, 19 மற்றும் 26ஆம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் தாம்பரம் சென்றடைகிறது.

ராமநாதபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில் வரும் 10, 12 மற்றும் 17 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் தாம்பரம் சென்றடைகிறது.

மறு மார்க்கத்தில், தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் வரும் 11, 13 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ராமநாதபுரம் சென்றடைகிறது.

இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கியது.

Advertisement
Tags :
Chennai to KanyakumariFEATUREDMAINpongalpongal special trainspongal train Ticket bookingspecial trains
Advertisement
Next Article