பொருளாதார SUPER POWER : மோடியின் உத்தியை பாராட்டி தள்ளும் சர்வதேச தலைவர்கள் - சிறப்பு கட்டுரை!
2024ம் ஆண்டில், இந்தியா குறிப்பிடத்தக்க பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய பிரதமர் மோடியின் தலைமையை சர்வ தேசத் தலைவர்கள், சிறந்த பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முன்னணி தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
Advertisement
மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடான இந்தியா, 2024 ஆம் ஆண்டில்,உலகளாவிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் 7 சதவீத ஜிடிபி வளர்ச்சியுடன், சீனாவுக்கு எதிராக இந்தியா பொருளாதார விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பிரதமர் மோடி சொன்னது போல், சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தின் கீழ் இந்தியா சர்வதேச அரங்கில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. 10வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய அரங்கில் இந்தியாவின் எழுச்சி மாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் உலகத் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களால் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
2017ம் ஆண்டில், ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன், பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி என்றும், திறந்த மனதுடன் எப்போதும் மாற்றுக் கருத்தையும், மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர் என்றும், எதையும் திறம்பட செய்து முடிக்கும் திறன் படைத்தவர் என்றும் பாராட்டியுள்ளார்.
அதையே வேறு வார்த்தைகளால், 2021ஆம் ஆண்டு, ஃபர்ஸ்ட் சோலார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் விட்மர், பருவநிலை மாற்றத்தில் இந்தியா என்ன செய்கிறதோ அதையே ஒவ்வொரு நாடும் பின்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
2023 ஆம் ஆண்டில், ஹசன் ஆலம் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஹசன் அல்லம், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் தனியார் துறை குறிப்பாக உள்கட்டமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்தி உலகில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது என்று பாராட்டியுள்ளார்.
உற்பத்தித் தொழில்கள், குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை சீராக விரிவடைந்து வருவதாகவும், பிரதமர் மோடியின் தலைமையால் தான், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறியுள்ளது என்றும் சுஸுகி மோட்டார்ஸ் தலைவர் தோஷிஹிரோ சுசுகி தெரிவித்திருந்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில், 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைத் தொடலாம் என்றும், பெருகிவரும் சேவைகளின் ஏற்றுமதி, “டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியின் காரணமாக இந்தியா வேகமாக வளர்ந்து முன்னணியில் உள்ளது என்று WEF இன் தலைவர் போர்ஜ் பிரெண்டே கூறியுள்ளார்.
(GitHub CEO, Thomas Dohmke), கிட்ஹப் தலைமை நிர்வாக அதிகாரி, தாமஸ் டோம்கே, பிரதமராக மோடி வந்தபின், இந்தியாவில் எல்லாம் வேகமாக நகர்கின்றன என்றும், போக்குவரத்துத்துறையில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
(Nvidia) நிவ்டியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்க், (the Bill and Melinda Gates Foundation)பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறக்கட்டளைத் தலைவர் கிறிஸ்டோபர் ஜே. எலியாஸ், ( Kapsch Group )கப்ச் குழுமத்தின் தலைவர் George Kapsch, S4Capital நிறுவனத் தலைவர் மார்ட்டின் சோரெல், சிப் வார் நூலின் கிறிஸ் மில்லர், என பல முன்னணி வணிகத் தலைவர்கள் , பிரதமர் மோடியின் தலைமையை , நாட்டுக்கான அர்ப்பணிப்பை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை பிரதமர் மோடி வெற்றிகரமாக மாற்றியமைத்துள்ளார் என்று பாராட்டிய பில் கேட்ஸ், விவசாயிகளுக்கு அன்றாட வானிலையை முன்கூட்டியே அறிவிக்கும் இந்தியாவிடமிருந்து மற்ற நாடுகள் கற்று கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற பால் ரோமர் பாராட்டியுள்ளார். மேலும், ஆதார் எண்ணை மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் இணைத்து இந்தியா செய்ததைப் போல் மற்ற நாடுகளும் விரைவில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
பூடான் பிரதமர் தஷோ ஷேரிங் டோப்கே, கயானா அதிபர் இர்ஃபான் அலி, வியட்நாம் பிரதமர் ஃபாம்மின் சின், ஐஎம்எஃப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக், UNGA தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ், டிபி வேர்ல்ட் தலைவர் சுல்தான் அகமது பின் சுலேயம், அமெரிக்க இந்திய உத்திசார் மற்றும் கூட்டுறவு மன்றத்தின் தலைவர் ஜான் சேம்பர்ஸ், உள்ளிட்ட பலரும் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதுஎன்று பாராட்டியுள்ளனர்.
ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைப் பாராட்டிய கையோடு , ரஷ்யாவுக்கான உற்பத்தியை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்பும், பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் என்றும், அவரால் தான் இந்தியா வேகமாக முன்னேறுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
சர்வதேச நாடுகளின் தலைவர்கள் முதல் தொழில்நுட்பம் சார்ந்த அறிஞர்கள், தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் வரை எல்லோரும் ஒருமித்த கருத்தாக ஒரே குரலில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனை பாராட்டியுள்ளனர்.
சொல்லப்போனால், உலகளாவிய பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில், பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா விஸ்வ குருவாக விளங்குகிறது