செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகாத்மா காந்தி நினைவு தினம் - ராஜ்காட்டில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

11:12 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி டெல்லி ராஜ்காட்டில் உள்ள 'தேசத்தந்தை' மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Advertisement

Advertisement
Tags :
delhiFather of the Nation' Mahatma GandhiFEATUREDMahatma Gandhi death anniversareyMAINNarendra Modi paid floral tributespresident murmuprime minister modiRajghat
Advertisement