மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் பிரதமரானதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை என ம பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சத்ரபதி ஷாம்பாஜி நகரில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்த அவர், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பிரிவினைவாதத்தை அக்கட்சி கையில் எடுப்பதாக குற்றம்சாட்டினார். தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதாகவும், இதுதொடர்பாக காங்கிரஸ் ஆட்சியில் வெளியிடப்பட்ட நாளிதழ் விளம்பரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதையும் பிரதமர் மோடி மேற்கோள்காட்டினார்.
நாட்டுக்கும் தகுதிக்கும் இடஒதுக்கீடு எதிரானது என்பதே காங்கிரஸின் முழக்கம் என்று கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தாம் பிரதமராக இருப்பதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனவும் விமர்சித்தார்.