மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக கூட்டணி!
மகாராஷ்டிரா, சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலம் விரைவில் நிறைவுபெறுவதையடுத்து, அங்கு மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கடந்த 13ஆம் தேதி, 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 2வது கட்டமாக, கடந்த 20ஆம் தேதி 38 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதே போல மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலமும் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா (288 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
சிவசேனா, பா. ஜ., கூட்டணி (மஹாயுதி கூட்டணி) - 216
காங்கிரஸ் கூட்டணி (மஹா விகாஸ் அகாடி கூட்டணி (காங்., சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு) -58
பிற கட்சிகள் - 14
ஜார்கண்ட் (81 தொகுதிகள்) சட்டசபை தேர்தல் முன்னிலை நிலவரம்
பா.ஜனதா கூட்டணி - 30
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி -49
பிற கட்சிகள் - 2
வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் பாரத் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார்.
சிகான் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாரத் பொம்மை 1567 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.