செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகா கும்பமேளாவில் மின்னும் முகங்கள் : சனாதனத்தை பரப்பும் "MUSCULAR BABA" - சிறப்பு தொகுப்பு!!

09:00 PM Jan 19, 2025 IST | Sivasubramanian P

மகா கும்பமேளாவில் நாள்தோறும் கூடும் லட்சக்கணக்கானோர் மத்தியில், ஒருசிலர் தங்கள் தனித்தன்மையால் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

உலகின் மாபெரும் ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்கு நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி வருகின்றனர். கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி ஆகிய புனித நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது, பாவங்களை போக்கி, ஆன்மாவை தூய்மைப்படுத்தும் என்பதும், மனிதனை பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவித்து முக்தி பெற வழிவகுக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் இந்த மகா கும்பமேளாவில், 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இப்படி நாள்தோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களையும், துறவிகளையும் மகா கும்பமேளா ஈர்த்தாலும், அவர்களுள் ஒரு சிலரே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றனர். அப்படி கவனம் பெற்ற ஒரு துறவிதான் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆத்ம பிரேம் கிரி மஹராஜ். இவரின் 7 அடி உயரம், ஆஜானுபாகுவான உடல் அமைப்பு போன்றவற்றால், சில வலைபதிவாளர்கள் இவரை "MUSCULAR BABA" என செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

காவி உடை, ருத்ராட்ச மாலைகள் அணிந்து வந்த இவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆத்ம பிரேம் கிரி மஹராஜின் கம்பீரமும், வசீகரமும் நிறைந்த ஆஜானுபாகுவான தோற்றம், பகவான் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமரை தங்களுக்கு நினைவூட்டுவதாக பலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

ரஷ்யாவில் 30 ஆண்டுகளுக்கு முன் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், பின்னர் ஆன்மிக ஞானத்தை தேடி சனாதன தர்மத்தை தழுவியுள்ளார். உலகம் முழுவதும் பயணித்து தனது வாழ்க்கையை இந்து மத போதனைகளுக்காக அர்ப்பணித்துள்ளார். தற்போது நேபால நாட்டில் உள்ள 'ஜுனா அகாரா' என்ற பழமையான மடாலயத்தின் உறுப்பினராக சேவையாற்றி வரும் "MUSCULAR BABA", உலகம் முழுவதும் சனாதன தர்மத்தை பரப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க மத்திய பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மோனாலிசா போன்ஸ்லே என்ற இளம்பெண்ணும் இணைய வாசிகள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார். பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் முத்துமணி மாலைகள் விற்பனை செய்து வரும் இவர், தனது தனித்துவமான தோற்றத்தாலும், கவர்ந்திழுக்கும் சிரிப்பாலும் வெளிநாட்டவர்கள் உட்பட பலரின் பார்வைகளையும் தன்வசப்படுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோக்களாலும், புகைப்படங்களாலும் கடந்த சில நாட்களாக குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றுள்ள மோனாலிசாவை, பலர் "கும்பமேளாவின் மோனாலிசா" என புகழ்ந்து தள்ளுவதுடன், அவரை தேடிச்சென்று புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பதத்துக்கேற்ப, மோனாலிசாவை தேடிச்செல்லும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதுபற்றி வீடியோ ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள மோனாலிசா போஸ்லே, நாள் முழுவதும் பலர் வந்து தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முற்படுவதால் தனது வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் மொனாலிசா போஸ்லேவின் வீடியோக்களை மேற்கொள்காட்டி, பாராட்டுதலுக்கும், துன்புறுத்தலுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINMaha Kumbh Melamaha kumbh mela 2025maha kumbhmaha kumbh 2025maha kumbh mela prayagraj 2025maha kumbh mela at prayagraj in 2025prayagraj maha kumbh mela 2025"MUSCULAR BABAMONALISA BHOSLE:
Advertisement
Next Article