மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் கிருஷ்ணகுமார்!
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் பதவியேற்றார்.
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த சித்தார்த் மிருதுள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அடுத்த தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமாரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றார். இம்பால் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகுமாருக்கு மணிப்பூர் ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சியில் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், சட்டப் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். மணிப்பூர் உயர்நீதிமன்ற 8-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்ற கிருஷ்ணகுமார், திருப்பூர் மாவட்டம் தாராபுத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.