மணிமுத்தாறு அருவியில் 6வது நாளாக குளிக்க தடை!
01:51 PM Jan 20, 2025 IST | Murugesan M
நெல்லை மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க 6வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்யும் பலத்த மழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Advertisement
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக கடந்த 15ஆம் தேதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால், சுற்றுலாப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 6வது நாளாக தொடர்கிறது.
Advertisement
அருவியை பார்வையிட மட்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைந்தவுடன் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
Advertisement