மதத்தை பற்றிய தவறான புரிதல் அதர்மத்திற்கு வழிவகுக்கும்! : ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
01:37 PM Dec 23, 2024 IST
|
Murugesan M
மதத்தை பற்றிய தவறான புரிதல் அதர்மத்திற்கு வழிவகுக்கும் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
Advertisement
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மதத்தை சரியான முறையில் விளக்கும் சமுதாயம் அவசியமானது என தெரிவித்தார்.
மதத்தின் பெயரால் நடக்கும் அனைத்து அடக்குமுறைகளும், அதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் நடைபெறுவதாகவும் அவர் கூறினார். மதத்தை பற்றி முறையாக கற்பிக்க வேண்டும் என வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், மதத்தை பற்றிய முழுமையற்ற மற்றும் முறையற்ற அறிவு, அதர்மத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
Next Article