செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய சஸ்பெண்ட் காவலர் - போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

02:20 PM Jan 10, 2025 IST | Murugesan M

சேலத்தில் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்த காவலர் மதுபோதையில் வசூல் வேட்டை நடத்திய நிலையில் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

சேலம் மாநகர், அம்மாபேட்டை, கடைவீதி, டவுன், செவ்வாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் இ-சேவை மையங்களுக்கு காவலர் உடையில் மர்மநபர் வந்துள்ளார். தன்னை காவலர் என்று அறிமுகப்படுத்திய அந்த நபர், தனது அவசர தேவைக்கு 4 ஆயிரம் ரூபாய் தேவைப்படுவதாகவும், அதனை ஜிபே மூலம் திருப்பி அனுப்புவதாகவும் கூறி பணத்தை பெற்றுள்ளார்.

பின்னர், பணத்தை பெற்று கொண்ட அந்த நபர், வியாபாரிகளிடம் வாங்கிய தொகையை விட குறைவாக ஜிபே மூலம் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில், அப்சரா இறக்கம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் பணமோசடியில் ஈடுபட்டபோது, அவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சென்னை தாம்பரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் கலைச்செல்வன் என்றும், பணியின்போது மதுபோதையில் இருந்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கையில் உள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement
Tags :
MAINsalemAmmapettaisuspended police constableconstable collecting moneyKadayeethimerchants.
Advertisement
Next Article