For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரை அழகர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா - காப்புக் கட்டுதலுடன் தொடக்கம்!

11:41 AM Jan 01, 2025 IST | Murugesan M
மதுரை அழகர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா   காப்புக் கட்டுதலுடன் தொடக்கம்

மதுரை அழகர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா காப்புக் கட்டுதலுடன் விமரிசையாக தொடங்கியுள்ளது..

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக போற்றப்படக் கூடியது அழகர் கோயில். இங்கு வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஜனவரி 19 ஆம் தேதி வரை பகல்பத்து ராபத்து என 20 நாட்கள் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜனவரி 10-ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

இந்நிலையில், பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் விழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உற்சவ மூர்த்தியான அழகருக்கு சிறப்பு அபிஷேகமும், வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டது.

தொடர்ந்து யானை, தீவட்டி பரிவாரங்களுடன் மேளதாளம் முழங்க அழகர் பல்லக்கில் புறப்பட்டு கருட மண்டபத்தில் எழுந்தருளினார். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

Advertisement
Tags :
Advertisement