செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்!

06:06 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேடுதல் குழு அறிவிப்பாணையை திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு தொடர்புடைய அறிவிக்கையை தமிழக உயர்கல்வித் துறை கடந்த 9-ஆம் தேதி வெளியிட்டது.

அதில் பல்கலைக்கழக மானிய குழு தலைவரின் பிரதிநிதி இடம்பெறாததற்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான அறிவிக்கையில், யுஜிசி தலைவரின் பிரதிநிதி வேண்டுமென்றே சேர்க்கப்படவில்லை என்றும்,

இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி, யுஜிசி தலைவரின் பிரதிநிதி இன்றி அமைக்கப்படும் தேடுதல் குழுவானது, ஆரம்ப நிலையிலேயே உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெளிவுபட கூறியுள்ளார்.

அந்த வகையில், ஏற்கெனவே தமிழக அரசு வெளியிட்ட அறிவிக்கையைத் திரும்ப பெற்று,

வேந்தர், சிண்டிகேட், பல்கலைக்கழக செனட் மற்றும் யுஜிசி தலைவரின் பிரதிநிதிகளை உள்ளடக்கி, ஆளுநர் நியமித்த தேடுதல் குழுவை அரசாணையில் இடம்பெற செய்யுமாறு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDGovernor R.N. Ravi objectedGovernor R.N.RaviMAINotification of the search committee for the post of Vice-Chancellor of Madurai Kamaraj University.Tamil Nadu Higher Education Department.
Advertisement