மதுரை நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுப்பு - திட்டமிட்டபடி நடைபெறும் என பாஜக அறிவிப்பு!
12:08 PM Jan 02, 2025 IST | Murugesan M
மதுரையில் போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என மதுரை மாநகர பாஜக அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு நீதிகேட்டு பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளை ஜனவரி 3 -ஆம் தேதி மதுரை செல்லத்தம்மன் கோவிலில் துவங்கி சென்னை வரை பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.
Advertisement
நீதி கேட்பு பேரணியை பாஜக ::மூத்த தலைவர் குஷ்பூ தொடங்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பேரணிக்கு அனுமதி கேட்டு மதுரை மாநகர பாஜக காவல் ஆணையர் மற்றும் திலகர் திடல் காவல் நிலையத்தில் மனு அளித்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில், திட்டமிட்டபடி தடையை மீறி பேரணி நடைபெறும் என மதுரை மாநகர பாஜக அறிவித்துள்ளது.
Advertisement