மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - உச்ச நீதிமன்றம் உத்தரவு!
01:12 PM Dec 05, 2024 IST
|
Murugesan M
முரசொலி அலுவலகம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்கு ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
கடந்த 2020-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியது குறித்து முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.
Advertisement
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அரசியலுக்கு வந்துவிட்டால் எதையும் தாங்கக்கூடிய காண்டாமிருகத்தின் தோல் போல் இருக்க வேண்டும் என முரசொலி அறக்கட்டளைக்கு அறிவுரை வழங்கி இருந்தது.
அதனைதொடர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.
Advertisement
Next Article