மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு!
மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்கு தமிழகத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
Advertisement
விஸ்வகர்மா திட்டம் தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, நிகழ்வாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி வரையில் 2 கோடியே 61 லட்சம் விண்ணப்பங்களை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து 8 லட்சத்து 52 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவலளித்த அவர், திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கைவினை கலைஞர்களின் விவரங்களை சரிபார்ப்பதில் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து முரண்பாடு இருந்து வரும் நிலையில் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் அல்லது கிராம சபைத் தலைவர் தான் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கைவினைக் கலைஞர்களுக்கு பயனளிக்கும் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.