செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழு : அமைச்சரவை ஒப்புதல்!

05:34 PM Jan 16, 2025 IST | Murugesan M

மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மோடி  ஒப்புதல் அளித்துள்ளார் என்று  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 3,985 கோடி ரூபாய் மதிப்பில் மூன்றாவது ஏவுதளம் அமைய உள்ளது. பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவு பெறும்.

இதன் மூலம், இஸ்ரோ அதிகளவில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கும், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லவம், விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கும் உதவும் எனத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
8th Central Pay Commission for Central Government Employees! : Union Cabinet approvalFEATUREDMAIN
Advertisement
Next Article