செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா? : அன்பில் மகேஷ்க்கு அண்ணாமலை கேள்வி!

05:35 PM Mar 16, 2025 IST | Murugesan M

அமைச்சர் அன்பில் மகேஷ்  மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பாடத்தினைக் கற்றுக் கொடுக்க, மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

அண்டை மாநிலமான கேரளாவில், ICT பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை. உங்க மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது? என்று  அமைச்சர் அன்பில் மகேஷிடம்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINtn bjpAren't you ashamed to talk about everything that comes up on WhatsAppleaving aside the funds provided by the central government?: Annamalai question to Anbil Mahesh!
Advertisement
Next Article